Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சொத்து விலைகளை மிகைப்படுத்திய முகவருக்குச் சிறை

PropNex சொத்துச் சந்தை மேம்பாட்டு நிறுவன முகவர் கூ பிங் சுவான் ஜேம்ஸ் ஈதனுக்கு (Ngu Ping Chuan James Ethan) ஓராண்டுத் தடையும், 30ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

PropNex சொத்துச் சந்தை மேம்பாட்டு நிறுவன முகவர் கூ பிங் சுவான் ஜேம்ஸ் ஈதனுக்கு (Ngu Ping Chuan James Ethan) ஓராண்டுத் தடையும், 30ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சொத்து முகவர் மன்றத்தின் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக அந்தத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.

39 வயது முகவர் கூ, கூட்டுரிமை வீடு ஒன்றை வாங்கிய வாடிக்கையாளருக்குச் சரியான முறையில் சேவை வழங்கவில்லை என்று கூறப்பட்டது.

இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து ஓராண்டுக்கு அவர் சொத்து முகவராகச் செயல்பட முடியாது.

கூட்டுரிமை வீட்டை விற்பவர் குறைந்தது 1.02 மில்லியன் வெள்ளிக்கு விற்க முன்வந்ததை வாங்கவிருந்தவரிடம் Ngu தெரிவிக்காதது,

தரகுத் தொகை பெற்றுக்கொள்வது குறித்து எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கத் தவறியது,

பின்னர் அந்த வீட்டைப் பத்தாயிரம் வெள்ளி குறைவாக விற்பனை செய்ய வீட்டு உரிமையாளர் முன்வந்ததை வாங்குபவரிடம் தெரிவிக்காகது

என 3 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

அவற்றை கூ ஒப்புக்கொண்டார்.

அவரது தவற்றால் வீட்டை வாங்கியவருக்கு 20ஆயிரம் வெள்ளி முதல் 30ஆயிரம் வெள்ளி வரை நட்டம் ஏற்பட்டது.

கூக்கு விதிக்கப்பட்ட தண்டனை, சொத்து முகவர் மன்றம் இதுவரை விதித்த ஆகப் பெரிய தண்டனையாகக் கருதப்படுகிறது.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்