Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் காற்றுத் தரம் இன்று ஆரோக்கியமற்ற நிலையை எட்டலாம்: தேசிய சுற்றுப்புற அமைப்பு

சிங்கப்பூரின் காற்றின் தரம் இன்று ஆரோக்கியமற்ற நிலையை எட்டலாம் என தேசிய சுற்றுப்புற அமைப்பு முன்னுரைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் காற்றுத் தரம் இன்று ஆரோக்கியமற்ற நிலையை எட்டலாம்: தேசிய சுற்றுப்புற அமைப்பு

(படம்: TODAY)

சிங்கப்பூரின் காற்றின் தரம் இன்று ஆரோக்கியமற்ற நிலையை எட்டலாம் என தேசிய சுற்றுப்புற அமைப்பு முன்னுரைத்துள்ளது.

இந்தோனேசியாவின் சுமாத்ரா, கலிமந்தான் பகுதிகளில் இருந்து புகைமூட்டம் அதிகம் வருவது அதற்குக் காரணம்.

இன்று காலை 7 மணி நிலவரப்படி, ஒரு மணி நேரத்துக்கான காற்றுத் தரம், வழக்கமான நிலையில் இருந்தது.

இருப்பினும், 24 மணிநேரத்துக்கான காற்றின் தரம், 86 புள்ளிக்கும் 94 புள்ளிக்கும் இடைப்பட்ட அளவில், மிதமான நிலையில் உள்ளது.

நேற்றிரவு சிங்கப்பூரின் தென் பகுதியில், காற்றின் தரம், 99ஆகப் பதிவானது.

அந்தக் குறியீட்டில், காற்றின் தரம், 101யைக் கடந்தால், அது ஆரோக்கியமற்ற நிலையைக் குறிக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்