Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

PSLE தாய்மொழித் தேர்வு மதிப்பீட்டு முறையை மாற்றக் கோரி மனு

மதிப்பீட்டு முறையில் மாற்றம் கண்டுள்ள தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு முறை, பள்ளிகளில் தாய்மொழிப் பாடம் எடுக்காத மாணவர்களுக்கு சாதகமானதல்ல என்று வலியுறுத்தும் மனு ஒன்றில் சுமார் 1,400 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
PSLE தாய்மொழித் தேர்வு மதிப்பீட்டு முறையை மாற்றக் கோரி மனு

(படம்: Ernest Chua/TODAY)

மதிப்பீட்டு முறையில் மாற்றம் கண்டுள்ள தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு முறை, பள்ளிகளில் தாய்மொழிப் பாடம் எடுக்காத மாணவர்களுக்கு சாதகமானதல்ல என்று வலியுறுத்தும் மனு ஒன்றில் சுமார் 1,400 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

தாய்மொழிப் பாடம் எடுக்காத மாணவர்கள், அல்லது வேறு கல்வி நிலையங்களில் தாய்மொழி கற்கும் மாணவர்கள் புதிய மாற்றங்களின் அடிப்படையில் தாய்மொழிக்கான தேர்ச்சி நிலை (AL) 6 முதல் 8 பெறவிருக்கின்றனர்.

மாணவர்கள் விரைவுப் பிரிவுக்குச் (G3) செல்வதற்கு 20 புள்ளிகளுக்கும் குறைவாகத் தேவைப்படுவதால், புதிய மாற்றம் அவர்களைப் பாதிக்கும் என்பதைப் பெற்றோர் சிலர் சுட்டியுள்ளனர்.

இறுதித் தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படும் முறையை நீக்கவோ மாற்றவோ கோரி மனுவில் கையெழுத்திடுமாறு change.org இணையப்பக்கத்தில் பெற்றோர் சிலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

1,500 கையெழுத்துகளைத் திரட்டிய பின்னர், மனு கல்வியமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அனுப்பப்படும்.

தற்போது உள்ள தேர்வு முறையில் தாய்மொழியில் இறுதித் தேர்வு எழுதாத மாணவர்கள், அவர்களுக்கு ஒப்பாக மற்ற பாடங்களில் மதிப்பெண் எடுத்த, தாய்மொழித் தேர்வு எழுதிய மாணவர்களுடன் ஒப்பிடப்படப்படுகிறார்கள்.

அதிலிருந்து அவர்களின் ஆற்றலுக்கு நிகராக தாய்மொழிக்கான மதிப்பெண் கொடுக்கப்படுகிறது.
அந்த அடிப்படையில் மாணவரின் இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்