Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நரம்புத்-தசைப் பிரச்சினை இருந்தும் இறுதியாண்டுத் தேர்வில் சிறப்பாகத் தேறிய மாணவர்

சிறு வயதில் பல்வேறு சிரமங்களை மாணவர்கள் சிலர் சந்தித்திருக்கலாம். 

வாசிப்புநேரம் -
நரம்புத்-தசைப் பிரச்சினை இருந்தும் இறுதியாண்டுத் தேர்வில் சிறப்பாகத் தேறிய மாணவர்

படம்: ஜமுனா

சிறு வயதில் பல்வேறு சிரமங்களை மாணவர்கள் சிலர் சந்தித்திருக்கலாம்.

அத்தகைய சிரமங்களை எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் இறுதியாண்டுத் தேர்வில் சிறப்பாகச் செய்திருக்கிறார் பயனியர் தொடக்கப்பள்ளி மாணவர் துர்கேஸ்வரன் கிருஷ்ணன்.

அவருக்கு ஒரு வயதிருக்கும்போது நரம்புத்-தசைப் பிரச்சினை இருந்தது தெரியவந்தது. அதனால் இவரின் கல்வி பாதிக்கப்பட்டது.

தொடக்கநிலை முதலாம் வகுப்பைச் சற்றுத் தாமதமாகவே தொடங்கினார்.

சில நேரத்தில் தாம் மருத்துவமனைக்குப் போக வேண்டிய சூழ்நிலை இருக்கும் என்றும் அதனால் தேர்வு நாள்களில் பிரச்சினைகள் இருக்கும் என்றும் துர்கேஸ் கூறினார்.

நண்பர்களின் ஆதரவு இருந்ததால், நரம்புத் தசைப் பிரச்சினை அவருக்கு இடையூறாக இல்லை.

உற்சாகத்துடன் அவர்களோடு சேர்ந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் துர்கேஸ் கூறினார்.

துர்கேஸ்வரனை ஊக்குவிக்கும் வகையில், பல வசதிகளைச் செய்துகொடுத்துள்ளது பயனியர் தொடக்கப் பள்ளி.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்