Images
  • school
    கோப்புப் படம்: TODAY

இந்த வருடம் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு எழுதிய 98.4 விழுக்காட்டு மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லத் தகுதி

சிங்கப்பூரில் இம்முறை, தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு (PSLE) எழுதிய மாணவர்களில் 98.4 விழுக்காட்டினர் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லத் தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில் 66.3 விழுக்காட்டினர் விரைவுப் பாடத்துக்குச் செல்வர்.

21.2 விழுக்காட்டினர் வழக்கநிலை ஏட்டுக் கல்விப் பிரிவிலும், 11 விழுக்காட்டினர் வழக்கநிலை தொழிற்கல்விப் பிரிவிலும் படிப்பைத் தொடரத் தகுதி பெற்றுள்ளனர்.

சென்ற ஆண்டைப் போலவே மாணவர்கள், இம்முறையும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

உயர்நிலைக் கல்விக்குத் தகுதி பெறாத 1.6 விழுக்காட்டு மாணவர்கள், அடுத்த ஆண்டு மீண்டும் தொடக்கப் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வை எழுதலாம்.

அல்லது மாற்றுக் கல்விக்குரிய பாதைகளை அவர்கள் தெரிவு செய்யலாம். 

Top