Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் 98.4% மாணவர்கள் தேர்சி

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வை இந்த ஆண்டு எழுதிய மாணவர்களில் 98.4 விழுக்காட்டினர் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லத் தகுதிபெற்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -
தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் 98.4% மாணவர்கள் தேர்சி

(கோப்புப்படம்: ஷரளா தேவி)


தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வை இந்த ஆண்டு எழுதிய மாணவர்களில் 98.4 விழுக்காட்டினர் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லத் தகுதிபெற்றுள்ளனர்.

தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் 40,256 பேர், இந்த ஆண்டு இறுதித் தேர்வை எழுதினார்கள்.

அவர்கள் இன்று (நவம்பர் 11) தங்கள் தொடக்கப்பள்ளிகளில் தேர்வு முடிவுகளைப் பெற்றனர்.

உயர்நிலைப் பள்ளிக்குத் தகுதி பெறும் மாணவர்கள்: 39,622 (98.4%)

விரைவுநிலைக்குத் தகுதிபெறும் மாணவர்கள்: 66.3%

வழக்கநிலைக்குத் (ஏட்டுக்கல்வி) தகுதிபெறும் மாணவர்கள்:
21.0%

வழக்கநிலைக்குத் (தொழில்நுட்பக் கல்வி) தகுதிபெறும் மாணவர்கள்: 11.2%

634 மாணவர்கள் (1.6விழுக்காடு) உயர்நிலை 1இன் எந்தவொரு பிரிவுக்கும் தகுதிபெறவில்லை.

இந்த மாணவர்கள் அடுத்த ஆண்டு மீண்டும் தேர்வை எழுதலாம் அல்லது அசம்ப்ஷன் பாத்வே பள்ளிக்கோ (Assumption Pathway School) நார்த்லைட் பள்ளிக்கோ (NorthLight School) விண்ணப்பிக்கலாம்.

உயர்நிலை 1க்குத் தகுதிபெறும் மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.

அவற்றின் முடிவுகள் டிசம்பர் 20 அன்று வெளிவரும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்