Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'நீங்கள் மேம்பட்டதைப் பெறத் தகுதியுள்ளவர்' என்னும் முழக்கவரியோடு வெளியான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தேர்தல் அறிக்கை

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அதன் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அதன் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் அடைந்துள்ள பொருளியல் வளர்ச்சியின் பலன்களை, சிங்கப்பூரர்கள் அனுபவிப்பதை உறுதி செய்வதை அது முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.

"You Deserve Better" அதாவது "நீங்கள்
மேம்பட்டதைப் பெறத் தகுதியுள்ளவர்" என்ற முழக்கவரியுடன், 13 பக்கத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

பொருளியல் மேம்பாடு, சமூக மேம்பாடு, அரசியல் மேம்பாடு என மூன்றாகப் பிரிக்கப்பட்ட அறிக்கை, மாற்றுத் தொலைநோக்கை உருவாக்கும் உத்திகளோடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இணையம் வழி நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில், கட்சியின் துணைத் தலைவர் ஹேஸல் போவா அதன் விவரங்களை வெளியிட்டார்.

பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பரந்த கொள்கைகளை உருவாக்குமுன், சிறந்த பல அம்சங்கள் கருத்தில்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

பொருளியல் வளர்ச்சியைப் பொறுத்தவரை, பொருளியல் சிங்கப்பூரர்களுக்குச் சேவையாற்ற வேண்டுமே தவிர, சிங்கப்பூரர்கள் பொருளியலுக்குச் சேவையாற்றக்கூடாது என்றார் திருமதி போவா.

பொருளியல் வளர்ச்சியின் மொத்த அடிப்படையே, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுதான்...

ஆனால், பொருளியலை வளர்ச்சி காணச் செய்வதற்காக மக்களைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

பொருளியல் மேம்பாட்டைப் பொறுத்தவரையில், சம்பள வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றது கட்சி.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்