Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'கட்சியிலிருந்து சிலர் விலகுவதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை': சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர் டான் செங் போக்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியிலிருந்து சிலர் விலகியதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்று அதன் தலைவர் டான் செங் போக் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியிலிருந்து சிலர் விலகியதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்று அதன் தலைவர் டான் செங் போக் கூறியுள்ளார்.

கட்சி தொடங்கி ஓர் ஆண்டு மட்டுமே ஆகியுள்ள நிலையில், கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர்களால் பாதிப்பு ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

அகம்பாவம் மிக்க சிலர், கட்சியில் சேர்ந்தது சொந்த ஆதாயத்துக்காகதானே தவிர சிங்கப்பூரின் மேம்பாட்டுக்காக அல்ல என்று டாக்டர் டான் சொன்னார்.

தமது கட்சியில் இணைவதற்கு ஒவ்வொருவருக்கும் வாய்ப்பளிக்கப்படவேண்டும் என்ற அவர், கட்சியால் தங்களுக்கு என்ன ஆதாயம் என்பதை மனத்திற்கொண்டே சிலர் சேர்ந்தனர் என்பது காலப்போக்கில் தெரியவந்தது என்றார்.

கடந்த இரண்டு மாதங்களில், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியிலிருந்து இருவர் விலகிக்கொண்டதாகவும் இருவர் நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.

கட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாகச் சொன்ன டாக்டர் டான், 20 அல்லது 30 பேர் வெளியேறுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்றார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்