Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மனநல மருத்துவருக்கு விதிக்கப்பட்ட $50,000 அபராதத்தைக் குறைக்க சிங்கப்பூர் மருத்துவ மன்றம் மேல்முறையீடு

சிங்கப்பூரில் மனநல மருத்துவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் குறைக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சிங்கப்பூர் மருத்துவ மன்றம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
மனநல மருத்துவருக்கு விதிக்கப்பட்ட $50,000 அபராதத்தைக் குறைக்க சிங்கப்பூர் மருத்துவ மன்றம் மேல்முறையீடு

(படம்: REUTERS)

சிங்கப்பூரில் மனநல மருத்துவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் குறைக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சிங்கப்பூர் மருத்துவ மன்றம் தெரிவித்துள்ளது.

ஒரே மாதத்துக்குள் இரண்டாவது முறையாக மன்றம், மருத்துவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்கிறது.
அந்த முடிவை சுகாதார அமைச்சு வரவேற்றுள்ளது.

தொலைபேசி மூலம் அழைத்தவரின் அடையாளத்தை உறுதிசெய்யாமல் மனநல மருத்துவக் கழகத்துக்கு நோயாளியைப் பரிந்துரைத்ததற்காக டாக்டர் சூ ஷுவென் சியாங்கிற்கு 50,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

சம்பவம் 2015இல் நடந்தது.

தொலைபேசியில் பேசிய நோயாளியின் சகோதரர் அவருடைய கணவராக நடித்திருக்கிறார். பிறகு, மருத்துவரின் பரிந்துரையைக் கொண்டு நோயாளியிடமிருந்து அந்த ஆடவர், தனக்குத் தனிநபர் பாதுகாப்பு ஆணையைப் பெற்றுக்கொண்டார்.

டாக்டர் சூவின் குற்றத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை பொருத்தமானதா என்பது குறித்து மறுபரிசீலனை செய்த பிறகு அபராதத் தொகையைக் குறைக்க முறையீடு செய்துள்ளதாக சிங்கப்பூர் மருத்துவ மன்றம் கூறியுள்ளது.

ஏப்ரலிலிருந்து ஜூன் மாதத்துக்குள் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை இடம்பெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்