Images
  • eb

பொதுப் பயனீட்டுக் கழக ஊழியருக்கு COVID-19 கிருமித்தொற்று

பொதுப் பயனீட்டுக் கழக ஊழியர் ஒருவருக்கு COVID-19 கிருமி தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கழகம் இன்று அதனைத் தெரிவித்தது.

நியூடனில் உள்ள கழகத்தின் சுற்றுப்புறக் கட்டடத்தில் அவர் நிர்வாகப் பிரிவில் பணியாற்றுகிறார்.

கட்டடத்தில் அவர் வேலைபார்க்கும் மாடியில் உடன் பணியாற்றும் 70 பேர் உடனடியாக அலுவலகத்திலிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதற்காக அவர்கள் இன்று வீட்டிலிருந்தே வேலைசெய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

திங்கட்கிழமையிலிருந்து ஊழியர்கள் வழக்கம்போலப் பணியாற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Top