Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'பொதுத்துறையில் தகவல் பாதுகாப்பை மேம்படுத்த, கடுமையான நடவடிக்கைகள் அவசியம்': மறு ஆய்வுக் குழு

பொதுத்துறையில் தகவல் பாதுகாப்பை மேம்படுத்த, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்று மறு ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: சுமார் 1 நிமிடம்)

பொதுத்துறையில் தகவல் பாதுகாப்பை மேம்படுத்த, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்று மறு ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

அரசாங்க அமைப்புகளின் தகவல்தொழில்நுட்ப முறைகளை ஆழமாகச் சோதித்தபிறகு பொதுத்துறைத் தகவல் பாதுகாப்பு மறுஆய்வுக் குழு தனது யோசனைகளை முன்வைத்தது.

சுகாதார அமைச்சும் மத்திய சேமநிதிக் கழகமும் தகவல்தொழில்நுட்பச் சோதனைக்குட்படுத்தப்பட்ட அரசாங்க அமைப்புகளில் அடங்கும்.

மறுஆய்வுக்குழு 14 தொழில்நுட்பரீதியான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது.

உடனடி கவனம் தேவைப்படும் ரகசியத் தகவல்கள் அடங்கிய மின்னஞ்சல்களைக் கையாள்வது உள்ளிட்டவற்றில் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

ரகசியத் தகவல்கள் அதிக அளவில் கையாளப்படும் ஐந்து அமைப்புகளில் தீவிரச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு, சுகாதார அறிவியல் ஆணையம், சுகாதார மேம்பாட்டு வாரியம், மத்திய சேமநிதிக் கழகம், உள்நாட்டு வருவாய் ஆணையம் ஆகியவை அந்த ஐந்து அமைப்புகள்.

தகவல் பாதுகாப்பு மறுஆய்வுக்குழு சென்ற மார்ச் மாதம் பிரதமர் லீ முன்னிலையில் அமைக்கப்பட்டது. மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தியோ சீ ஹியென் குழுவுக்குத் தலைமையேற்கிறார்.

குழுவின் ஆய்வு முடிவுகள், யோசனைகள் ஆகியவற்றை வரும் நவம்பர் முப்பதாம் தேதிக்குள் பிரதமரிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்