Images
  • public sprit
    (படம்: SPF)

விளக்குக் கம்பம் சாலையில் விழாமல் நிறுத்திய 13 பேருக்கு பொதுநல உணர்வுமிக்கச் செயலுக்காக விருது

பொதுநல உணர்வுமிக்க செயல்களுக்காக பொதுமக்கள் 13 பேர் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 12ஆம் தேதி சாய்ந்து நின்ற விளக்குக் கம்பம் சாலையில் விழாமல் அந்த 13 பேரும் தடுத்து நிறுத்தினர்.

பிறகு அதிகாரிகள் அந்த விளக்குக் கம்பத்தைப் பத்திரமாகத் தரையிறக்கினர்.

சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. 13 பேரின் நற்செயலால் பொருள்சேதமும் தவிர்க்கப்பட்டன.

தன்னலமற்ற அவர்களுக்கு விருது வழங்குவதில் மகிழ்ச்சியடைவதாய் மத்திய காவல்துறைப் பிரிவு தெரிவித்தது.

13 பேரின் செயல் குடியிருப்புப் பேட்டைகளைப் பாதுகாப்பானதாக வைத்திருக்க மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புவதாகவும் காவல்துறை கூறியது.  

Top