Images
  • Putin in sg (1)
    (படம்: Dmitri Lovetsky/Pool via REUTERS)

முதன்முறையாக சிங்கப்பூர் வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் முதன்முறையாக சிங்கப்பூர் வரவுள்ளார்.

நாளை சிங்கப்பூரில் தொடங்கவுள்ள 33ஆவது ஆசியான் உச்சநிலைச் சந்திப்பில் அவர் பங்கேற்கிறார்.

2009ஆம் ஆண்டு ரஷ்யாவைப் பிரதிநிதித்து அதன் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்விடேவ் (Dmitry Medvedev) சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.

அவரை அடுத்து சிங்கப்பூருக்கு வரும் ரஷ்ய தலைவர் அதிபர் புட்டின்.

சிங்கப்பூருக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஐம்பது ஆண்டுகளாக நீடிக்கும் இருதரப்பு உறவுக் கொண்டாட்டம் அதிபர் புட்டின் வருகையின்போது இடம்பெறும்.

வரும் செவ்வாய்க்கிழமை, அதிபர் புட்டினுக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பளிக்கப்படும். பின்னர் அவர் அதிபர் ஹலிமா யாக்கோப்பையும் பிரதமர் லீயையும் சந்திப்பார்.


 

Top