Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

6 ஆண்டுகள் காணாத உயர்வைக் கண்ட ஜூன் மாத தனியார் வீட்டு விற்பனைகளின் எண்ணிக்கை

சிங்கப்பூரில் சென்ற மாதம் விற்பனையான புதிய தனியார் வீடுகளின் எண்ணிக்கை 6 ஆண்டில் ஆக அதிகமாகப் பதிவானது.

வாசிப்புநேரம் -
6 ஆண்டுகள் காணாத உயர்வைக் கண்ட ஜூன் மாத தனியார் வீட்டு விற்பனைகளின் எண்ணிக்கை

(படம்: AFP)

சிங்கப்பூரில் சென்ற மாதம் விற்பனையான புதிய தனியார் வீடுகளின் எண்ணிக்கை 6 ஆண்டில் ஆக அதிகமாகப் பதிவானது.

கால வரம்பற்ற உரிமையைக் கொண்ட கூட்டுரிமை வீடுகள் அதிகம் விற்பனையானதால் அது சாத்தியமானது.

வழக்கமாகப் பள்ளி விடுமுறைக்காலமான ஜூன் மாதத்தில் வீட்டு விற்பனை மெதுவடையும்.

ஆனால் சென்ற மாதம், Executive கூட்டுரிமை வீடுகள் அல்லாத சுமார் 820 வீடுகள் விற்பனையானதாய் சொத்து மேம்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க அது இருபத்தைந்தரை விழுக்காடு அதிகம் என்று நகரச் சீரமைப்பு ஆணையம் கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்