Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போலியான மின்னஞ்சல்கள் தொடர்பில் Q-Ten வாடிக்கையாளர்களை விழிப்புடன் இருக்க எச்சரித்துள்ளது

போலியான மின்னஞ்சல்கள் தொடர்பில் Q-Ten வாடிக்கையாளர்களை விழிப்புடன் இருக்க எச்சரித்துள்ளது

வாசிப்புநேரம் -

இணைய விற்பனைத் தளமான Q-Ten, போலியான மின்னஞ்சல்கள் தொடர்பில் தமது வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று எச்சரித்துள்ளது.

அத்தகைய போலி மின்னஞ்சல்கள், வாடிக்கையாளர்களை ஆய்வு ஒன்றில் ஈடுபட ஊக்குவிக்கும். அவ்வாறு ஆய்வில் ஈடுபடுவோருக்கு, சிறப்பு அன்பளிப்புகள் வழங்கப்படும் என்று அந்த மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் முதலான தனிப்பட்ட விவரங்களைத் திரட்டுவதே அத்தகைய மின்னஞ்சல்களின் நோக்கம்.

அவ்வாறு பெறப்படும் தகவல்களைக் கொண்டு, வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்குகளில் முறையற்ற பரிவர்த்தனைகள் அனுமதியின்றி மேற்கொள்ளப்படலாம்.

ஆக, அத்தகைய மின்னஞ்சல்களில் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்புகளைத் திறக்கவேண்டாம் என்று Q-Ten தமது வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்