Images
  • stabbing
    (படம்: Jeremy Long)

குவீன்ஸ்டவுனில் நடந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் பெண்ணுக்குக் கடுமையான காயங்கள்

குவீன்ஸ்டவுனில் நேற்றிரவு நடந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் மாது ஒருவரின் கழுத்திலும் உடலின் வலது பக்கத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.

அவரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் 29 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அறிக்கையின் மூலம் இன்று காவல்துறை தெரிவித்தது.

மெய் லிங் சாலையின் புளோக் 146 அருகே நடந்த கத்திக் குத்துச் சம்பவம் குறித்து இரவு 11 மணியளவில் காவல்துறைக்குச் செய்தி கிடைத்தது.

பெண்ணின், கழுத்து, காது, தோள், முழங்கை ஆகியவற்றில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையோடு அபராதமும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

Top