Images
  • Queenstown Stabbing
    (படம்: TODAY)

குவீன்ஸ்டவுன் கத்திக் குத்துச் சம்பவம்: 29 வயது சந்தேக நபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு


சிங்கப்பூர்: குவீன்ஸ்டவுனில் நேற்று முன் தினம் பெண்ணைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் ஆடவர் மீது இன்று (அக்டோபர் 13) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

வேண்டுமென்றே ஒருவரைக் காயப்படுத்தியதாக 29 வயது முகமது ஃபைஸால் சாலே மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக அவருக்கு 15 ஆண்டு சிறைதண்டனை, பிரம்படி, அபராதம் ஆகியவை விதிக்கப்படலாம்.

சம்பவம் வியாழக்கிழமை இரவு நடந்தது.

சுமார் 20 வயது இருக்கும் நூர்திலா இன்னும் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

Top