Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நான்கு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கான 7 புதிய தங்கும் விடுதிகள்

சிங்கப்பூரில் நாலே மாதங்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான 7 தங்குமிடங்கள் விரைவாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
நான்கு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கான 7 புதிய தங்கும் விடுதிகள்

(கோப்புப் படம்: REUTERS/Edgar Su)

சிங்கப்பூரில் நாலே மாதங்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான 7 தங்குமிடங்கள் விரைவாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

கிராஞ்சி (Kranji), அட்மிரல்டி (Admiralty), சுவா சூ காங் (Choa Chu Kang) ஆகிய இடங்களில் உள்ள அந்த விடுதிகளில் 8,000 படுக்கைகளுக்கான வசதி உண்டு.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஊழியர்களுக்காக மேலும் 8 தங்குமிடங்கள் கட்டி முடிக்கப்படும்.

அப்போது 25,000 படுக்கைகளுக்கான வசதி அங்கிருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்தது.

விரைவாகக் கட்டிமுடிக்கப்பட்ட Westlite Kranji Way விடுதியில், ஒரு மாதத்திற்கு முன்பிருந்து வெளிநாட்டு ஊழியர்கள் 340 பேர் தங்கியுள்ளனர்.

1,300 பேர் வரை அங்கு தங்குவதற்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

விரைவாகக் கட்டிமுடிக்கப்பட்ட விடுதிகளில் ஒவ்வோர் அறையிலும் 10 பேர் வரை தங்குவதற்கு அனுமதியுண்டு.

30இலிருந்து 40 பேர் வரை கொண்ட குழுவுக்கு சமையலறைகள் போன்ற தனிப்பட்ட வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தனியாக ஓய்வெடுக்கும் அறையும், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரைத் தனிமைப்படுத்த சிறப்புப் பகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விரைவாகக் கட்டிமுடிக்கப்பட்ட தங்குமிடங்களில் கிருமிநாசினி மூலம் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஊழியர்களுக்கு வழக்கமான கிருமித்தொற்றுப் பரிசோதனைகளும் நடத்தப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்