Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முயல் இறைச்சி உணவு வகைகளை எதிர்த்து இணையவாசிகள் மனு

முயல் இறைச்சியைக் கொண்டு சில வகை உணவுகளை அறிமுகம் செய்த உணவகத்தை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
முயல் இறைச்சி உணவு வகைகளை எதிர்த்து இணையவாசிகள் மனு

(படம்: Pixabay)

முயல் இறைச்சியைக் கொண்டு சில வகை உணவுகளை அறிமுகம் செய்த உணவகத்தை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

சிங்கப்பூரில் 7 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறது Tong Xin Ruyi Traditional Hotpot உணவகம்.
உணவகம் கடந்த வாரம் அதன் Facebook பக்கத்தில், முயல் இறைச்சியைக் கொண்டு சமைக்கப்படும் 2 உணவு வகைகளை அறிமுகம் செய்தது.

அது இணையவாசிகளிடையே சர்ச்சையைக் கிளப்பியது.

சிலர், முயல் இறைச்சி சாப்பிடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், மற்றும் சிலர் இறைச்சியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆர்வமாய் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனால், முயல் நலனுக்குக் குரல் கொடுக்கும் Bunny Wonderland, House Rabbit Society Singapore Facebook பக்கங்கள், உணவகத்தின் செயலை எதிர்த்து இணைய மனு ஒன்றை உருவாக்கின.

மனுவில் சுமார் 5,000 பேர் கையெழுத்திட்டனர்.

அதன் பிறகு நிறுவனம் புதிய உணவு வகைகள் தொடர்பான விளம்பரங்களை மீட்டுக்கொண்டன.

அதனையடுத்து, முயல் இறைச்சியைக் கொண்டு செய்யப்பட்ட உணவை விற்பதை நிறுத்திவிட்டதா என்ற 8 World Newsஇன் கேள்விக்கு உணவகம் பதிலளிக்கவில்லை.

Tong Xin Ruyi Traditional Hotpot உணவகத்தின் நிர்வாகி, முயல் இறைச்சியை உணகங்களில் விற்பது சட்டப்படி குற்றமில்லை என்றும், நிறுவனம் சட்டத்தைப் பின்பற்றி வருவதாகவும் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்