Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் முயல்களை பாதிக்கும் கொடிய நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள்

சிங்கப்பூரில் முயல்களை பாதிக்கும் கொடிய நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் செயல்படும் விலங்குநல- மருத்துவர்கள், செல்லப் பிராணிகளுக்கானச் சேவை வழங்கும் கடைகள், விலங்கு-நல அமைப்புகள் முதலியவை, முயல்களை பாதிக்கும் கொடிய நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

சென்ற வாரம், Rabbit Haemorrhagic Disease எனும் நோய் சிங்கப்பூரில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக, தேசிய பூங்காக் கழகம் தெரிவித்திருந்தது.

எளிதில் தொற்றக்கூடிய அந்த நோய் 11 முயல்களைப் பாதித்துள்ளது.

தீவிரமாகத் தாக்கக்கூடிய அந்நோயால் முயல்கள் மாண்டுபோகக்கூடும்.

நோயால் மற்ற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படாது.

நோய்க்கான தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட முயல்கள் உயிர்பிழைக்கும் சாத்தியம் அதிகம் என விலங்குநல-மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அந்த மருந்தை, சிங்கப்பூருக்குத் தருவிக்கும் முயற்சியில் தேசியப் பூங்காக் கழகம் ஈடுபட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்