Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'COVID-19 சூழலால் உள்ளூர்வாசிகளுக்கும் வெளிநாட்டினருக்கும் இடையே உள்ள விரிசல் அதிகரித்துள்ளது'

சிங்கப்பூரில் நிலவும் COVID-19 சூழலால் வெவ்வெறு இனத்தவர், சமயத்தினரிடையே உள்ள வேறுபாடுகள் அதிகரித்துள்ளன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் நிலவும் COVID-19 சூழலால் வெவ்வெறு இனத்தவர், சமயத்தினரிடையே உள்ள வேறுபாடுகள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக, உள்ளூர்வாசிகளுக்கும் வெளிநாட்டினருக்கும் இடையே உள்ள விரிசல் அதிகரித்துள்ளதாக கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu)கூறியுள்ளார்.OnePeople.sg, Roses of Peace ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் திருவாட்டி ஃபூ பேசினார்.

அதில், ராபர்ட்ஸன் கீ வட்டாரத்தில் பாதுகாப்பு நடைமுறையைமீறி ஒன்றுகூடிய வெளிநாட்டினர், சொந்தநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும் என்று சிங்கப்பூரர்கள் கூறியதை அவர் சுட்டினார்.

வாழ்க்கை, வாழ்வாதாரச் சிக்கல்களுக்கு இடையே, மக்கள் விரக்தியில் உள்ளனர்.

அது, சமூகத்தில் உள்ள விரிசல்களை மோசமாக்கக்கூடும் என்று திருவாட்டி ஃபூ சொன்னார்.

சிரமம் நிறைந்த இந்தச் சூழலில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்கும்படி அமைச்சர் ஃபூ அழைப்பு விடுத்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்