Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இனவாதத்தைத் தூண்டும் சுவரோவியங்களைக் கிறுக்கிய ஆடவருக்குச் சிறை

இனவாதத்தைத் தூண்டும் சுவரோவியங்களை கேலாங் பகுதியில் கிறுக்கிய ஆடவருக்கு 13 மாதச் சிறைத்தண்டனையும் 9 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
இனவாதத்தைத் தூண்டும் சுவரோவியங்களைக் கிறுக்கிய ஆடவருக்குச் சிறை

படம்: Facebook/Balli Kaur Jaswal

இனவாதத்தைத் தூண்டும் சுவரோவியங்களை கேலாங் பகுதியில் கிறுக்கிய ஆடவருக்கு 13 மாதச் சிறைத்தண்டனையும் 9 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அவர் சுவர்களிலும் தூண்களிலும் அவ்வாறு கிறுக்கியுள்ளார்.

31 வயது சென் ஜியான்பாங் இவ்வாண்டு ஜனவரியில் 10க்கும் அதிகமான இனவாதத்தைத் தூண்டும் வாசகங்களைப் பொது இடங்களில் கிறுக்கினார்.

கேலாங், அல்ஜூனிட் ஆகிய பகுதிகளில் உள்ள கீழ்த்தளச் சுவர்களிலும் கூரை வேயப்பட்ட நடைபாதைகளிலும் அவை காணப்பட்டன. மலாய்ச் சமூகத்தைப் புண்படுத்தும் வகையில் அந்த வாசகங்கள் இருந்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்