Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டோருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவு வழங்குவது அவசியம்: துணைப் பிரதமர் ஹெங்

தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவு வழங்குவது அவசியம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டோருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவு வழங்குவது அவசியம்: துணைப் பிரதமர் ஹெங்

(படம்: Mediacorp)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவு வழங்குவது அவசியம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.

சமய நல்லிணக்கப் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றின் மூலம் சிங்கப்பூரின் சமய நல்லிணக்கம் வலுப்படுத்தப்பட்டாலும், அத்தகைய ஆதரவுக் கட்டமைப்பு அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

அத்தகைய முயற்சியில் தொண்டூழியர்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சு ஏற்பாடு செய்த வருடாந்தரப் பாராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணைப் பிரதமர் அவ்வாறு கூறினார்.

தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் ஆலோசனை வழங்குவது, நிதி ரீதியாகவும் மனோ-ரீதியாகவும் ஆதரவு வழங்குவது உள்ளிட்ட சேவைகளுக்காக, சுமார் 400 தொண்டூழியர்களுக்கு அமைச்சு பாராட்டு தெரிவித்துக் கொண்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்