Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Raffles City கடைத்தொகுதியில் முன்னதாக Robinsons இருந்த இடத்தில் கடை திறக்கும் BHG Singapore

Raffles City கடைத்தொகுதியில் முன்னதாக Robinsons கடை இருந்த இடத்தில், BHG Singapore நிறுவனம் கடை திறக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -

Raffles City கடைத்தொகுதியில் முன்னதாக Robinsons கடை இருந்த இடத்தில், BHG Singapore நிறுவனம் கடை திறக்கவுள்ளது.

இரண்டு மாடிகளுடன் செயல்படவுள்ள அந்தக் கடையில், அழகுப் பராமரிப்பு, ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும்.

BHG கடைகளில் வழக்கமாக இடம்பெறும் பிரபலமான முத்திரைப் பொருள்களுடன், சிங்கப்பூரில் பிரபலமான சில முத்திரைப் பொருள்களும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

சவால்மிக்க 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2021-ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள அந்தப் புதுத் தொடக்கம் நம்பிக்கை அளிப்பதாக BHG Singapore குறிப்பிட்டது.

கிருமித்தொற்றுச் சூழலில்,பொருள் வாங்கும் போக்கு மாற்றமடைந்ததாலும் வாடிக்கையாளர்களின் தேவை குறைந்ததாலும், Robinsons கடை, சிங்கப்பூரில் வர்த்தகத்தை முடித்துக்கொள்வதாகக் கடந்த ஆண்டு அறிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்