Images
  • mrt

ரயில் துறை ஊழியர்களின் பயிற்சிக்காக $100 மில்லியன் ஒதுக்கப்படும்

ரயில் துறை ஊழியர்களின் பயிற்சிக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், அரசாங்கம் 100 மில்லியன் வெள்ளியை ஒதுக்கவிருக்கிறது.

இரயில் கட்டமைப்பு விரிவாக்கப்படும் போது, ஊழியர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள அது உதவும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்ச்சியில் அது பற்றி அறிவிக்கப்பட்டது.

தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் பாதை, ஜூரோங் வட்டாரப் பாதை, குறுக்கு ரயில் பாதை என 3 புதிய பாதைகள் அடுத்த பத்தாண்டில் அமைக்கப்படவிருக்கின்றன.

அதன் மூலம், 2030ஆம் ஆண்டு சிங்கப்பூரின் மொத்த ரயில் கட்டமைப்பின் நீளம் 360 கிலோ மீட்டராகும்.

இரயில் நிலையத்திலிருந்து 10 நிமிட தூரத்தில் இன்னும் கூடுதல் வீடுகள் அமைந்திருக்கும்.

விரிவாக்கப்படும் இரயில் கட்டமைப்பு, மேலும் நுட்பமான பொறியியல் முறைகளைக் கொண்டிருக்கும்.

100 மில்லியன் வெள்ளி திட்டத்தின் கீழ், மின்னிலக்க சமிக்ஞை முறையைப் பயன்படுத்வது, தரவுகளை ஆராய்வது போன்றவற்றில் ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் என்று
போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் கூறினார்.

3,000 ஊழியர்களுக்குப் புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி வழங்க, போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும்.

இரயில் கட்டமைப்பை மேம்படுத்தத் தேவைப்படும் நவீனக் கருவிகளை வாங்க அந்தத் தொகைப் பயன்படுத்தப்படும்.

Top