Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் : மழை பெய்வதை முன்னுரைக்கும் தொழிநுட்பம் விரைவில் மேம்படுத்தப்படும்

சிங்கப்பூரில் மழை பெய்வதை முன்னுரைக்கும் தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் மேம்படுத்தப்படும். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் மழை பெய்வதை முன்னுரைக்கும் தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் மேம்படுத்தப்படும்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) நாடாளுமன்றத்தில் அது பற்றிப் பேசினார்.

தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம், பொதுப் பயனீட்டுக் கழகம், மழை பெய்வதை இன்னும் சிறந்த முறையில் கணித்து வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்த முடியும் என்றார் அவர்.

கனத்த மழை பெய்யும் வட்டாரங்களில் குறித்த நேரத்தில் பொது எச்சரிக்கை விடுக்கவும், தற்காலிக வெள்ளத் தடுப்புகளை உடனடியாக அமைக்கவும் அது அது உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

கடந்த பத்தாண்டில் பொதுப் பயனீட்டுக் கழகம் கால்வாய் மேம்பாட்டுப் பணிகளுக்காக சுமார் 2 பில்லியன் வெள்ளி முதலீடு செய்துள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 1.4 பில்லியன் வெள்ளி செலவிடப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்