Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முஸ்லிம் வெளிநாட்டு ஊழியர்கள் இனி ரமதான் மாதத்தின்போது கூட்டாகத் தொழுகை நடத்தலாம்

ரமதான் மாதத்தின்போது, முஸ்லிம் வெளிநாட்டு ஊழியர்கள், கூட்டுத் தொழுகைகளுக்கு இனி செல்லலாம்.

வாசிப்புநேரம் -

ரமதான் மாதத்தின்போது, முஸ்லிம் வெளிநாட்டு ஊழியர்கள், கூட்டுத் தொழுகைகளுக்கு இனி செல்லலாம்.

கிருமித்தொற்று தொடங்கியதிலிருந்து அவர்கள் கூட்டுத் தொழுகைகளுக்குச் செல்லவில்லை.

ஒவ்வொரு நாளும், 200 பேர் வரை மாலைநேரத் தொழுகையில் கலந்துகொள்ளலாம்.

100 பேர் கொண்ட 2 குழுக்களாக அவர்கள் பிரிக்கப்படுவர்.

தொழுகைகளுக்கு ஏற்பாடு செய்ய, வெளிநாட்டு ஊழியர் விடுதிகளை நடத்துவோர், ACE குழுமத்தின் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

தொழுகைகளின்போது பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும்.

சென்ற ஆண்டு, தங்கும் விடுதிகளில் முழு முடக்கநிலை அறிவிக்கப்பட்ட 2 நாள்களுக்குப் பிறகு, ரமதான் மாதம் தொடங்கியது.

ஊழியர்கள், தங்களின் தனிப்பட்ட அறைகளில் தொழுகைகளைத் தனியாகச் செய்தனர்.

எதிர்வரும் ரமதான் மாதத்தின்போது தடுப்பூசி போடும் பணிகள் இரவு 10 மணி வரை நீடிக்கவுள்ளன.

நோன்பை துறந்த பிறகு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அது வகை செய்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்