Images
  • state courts

உரிமம் இல்லாமல் Karaoke, மதுபானச் சேவை - ஆடவருக்கு அபராதம்

உரிமமின்றி Karaoke - பாடல் பாடும் நடவடிக்கை, மதுபான விற்பனை ஆகிய சேவைகளை வழங்கிய குற்றத்தை ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

38 வயது ஓங் ஹான் வெய் (Ong Han Wei) என்பவர் Oxley Bizhubஇல் மதுபானம், பாடல் பாடுதல் போன்ற சேவைகளை வழங்கும் கேளிக்கைக் கூடத்தை அமைக்க அவரது நண்பர் லீ ஜியென் லெ-வின் (Lee Jian Le) உதவியை நாடினார்.

அவ்வாறு செய்வதற்கு அனுமதி இல்லை என்பது நன்கு தெரிந்திருந்தும் அவர்கள் இருவரும் சென்ற ஆண்டு ஆகஸ்டில் கேளிக்கைக் கூடம் அமைத்தனர்.

சென்ற ஆண்டு செப்டம்பரில் அந்தக் கூடம் செயல்படத் தொடங்கியது.

செப்டம்பர் 24ஆம் தேதி இரவு, காவல்துறை அங்கு சோதனை செய்தபோது, கட்டுப்பாடுகள் மீறப்பட்டது தெரியவந்தது. அன்று லீ அங்கு இருந்தார்.

அங்கு சிலர் மதுபானம் அருந்தியதும் தெரியவந்தது. காவல்துறையினரிடம் பொதுக் கேளிக்கை உரிமத்தை லீயால் சமர்ப்பிக்க இயலவில்லை.

தொடர் விசாரணை மூலம் ஓங்கின் அடையாளம் தெரியவந்தது. அவரிடமும் உரிய உரிமங்கள் இல்லை எனத் தெரியவந்தது. அவருக்கு 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
 

Top