Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிகரிக்கும் சொத்துச் செல்வ இடைவெளியைச் சமாளிக்க சொத்துச் செல்வ வரி பரிந்துரை

அதிகரிக்கும் சொத்துச் செல்வ இடைவெளியைச் சமாளிக்க சொத்துச் செல்வ வரி பரிந்துரை

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில், அதிகரித்துவரும் சொத்துச் செல்வ இடைவெளியைச் சமாளிக்க, சொத்துச் செல்வ வரியை விதிப்பது உதவும் என சிங்கப்பூர் நாணய வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் பரிந்துரைத்துள்ளார்.

கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் பற்றிய கலந்துரையாடலில் பேசியபோது அவர் அந்தப் பரிந்துரையை முன்வைத்தார்.

வருமான ஏற்றத்தாழ்வைக் குறைக்க, மிதமான குறைந்தபட்சச் சம்பளம் ஒரு வழியாக இருக்கும் என்றும் திரு. மேனன் பரிந்துரைத்தார்.

படிப்படியாக அதிகரிக்கும் சம்பள முறைக்கு ஆதரவாக அது அமையும் என்றார் அவர்.

ஊழியர்கள் புதிய பொறுப்புகளுக்கு மாறும்போது அவர்களுக்குத் தற்காலிக மறுவேலைவாய்ப்பு ஆதரவு வழங்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்