Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நாடாளுமன்றத்தில் கூறிய பொய்யைத் தொடரும்படிப் பட்டாளிக் கட்சித் தலைவர்கள் கூறினர்: ரயீசா கான்

முன்னாள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் கூறிய பொய்யைத் தொடரும்படிப் பட்டாளிக் கட்சித் தலைவர்கள் தம்மிடம் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

முன்னாள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் கூறிய பொய்யைத் தொடரும்படிப் பட்டாளிக் கட்சித் தலைவர்கள் தம்மிடம் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

உண்மையை ஒப்புக்கொள்ளும்படி எந்த உறுப்பினரும் சொல்லவில்லை என்றார் அவர்.

நேற்றிரவு நாடாளுமன்றத்தின் சலுகைகள் குழு வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றன.

திருவாட்டி கான், பாட்டாளிக்கட்சியின் மூன்று உறுப்பினர்கள் ஆகியோர் கடந்த 2 நாள்களாக வழங்கிய வாய்மொழி ஆதாரத்தைக் குழு செவிமடுத்தது.

பொய் கூறிய ஐந்தாவது நாள் அதுபற்றிப் பட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், தலைவர் சில்வியா லிம்) துணைத்தலைவர் ஃபைஸல் மனாப் (Faisal Manap)
ஆகியோரிடம் உண்மையை ஒப்புக்கொண்டதாக அவர் சொன்னார்.

அப்போது தலைவர்கள், நாடாளுமன்றத்தில் பொய்யைத் தொடர்ந்து கூறுவதே சிறந்தது எனத் தம்மிடம் சொன்னதாகத் திருவாட்டி கான் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பாகக் காவல்துறையிடமிருந்து கோரிக்கைகள் ஏதும் வந்தால் அதைப் புறக்கணிக்குமாறு தலைவர்கள் சொன்னதாகவும் திருவாட்டி கான் தெரிவித்தார்.

இருப்பினும் அக்டோபர் 12ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் பொய் கூறியதை ஒப்புக்கொள்ளும்படியும் தமக்கு எதிராக எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்றும் திரு சிங்கும் திருவாட்டி லிம்மும் தெரிவித்ததாக அவர் சொன்னார்.

இந்நிலையில்,
திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் பொய் கூறியதாக ஒப்புக்கொண்ட மறுநாள், பட்டாளிக் கட்சி அதன் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை நிறுவியது.

அப்போது திருவாட்டி கானுக்கு செங்காங் குழுத்தொகுதியின் சக உறுப்பினர்களின் ஆதரவு இனி இல்லையென்பதால் பதவியிலிருந்து விலகுவதே சிறந்தது என்று கட்சித் தலைவர்கள் கூறியதாக அவர் சொன்னார்.

ஆனால் பாட்டாளிக் கட்சியினர் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கைகளும் திருவாட்டி ரயீசா கான் வெளியிட்ட தகவல்களும் மாறுபட்டுள்ளன.

வியாழனன்று நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் திருவாட்டி கான் பதவி விலகவில்லை என்றால் அவரைப் பணிநீக்கம் செய்யத் தயாராக இருப்பதாகக் கட்சி கூறியிருந்தது.

நாடாளுமன்றத்தில் உண்மையை ஒப்புக்கொள்ள 2 முறை அவரை வற்புறுத்தியதாகவும் கட்சி சொன்னது.

இத்தகைய சம்பவம் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகக் கூறிய திரு சிங், பொய்யைப் பற்றி ஆகஸ்டில் தெரிந்துகொண்டதை ஒப்புக்கொண்டார்.

இருப்பினும் திருவாட்டி கான் சொந்தமாக உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும் எனத் தலைவர்கள் முடிவெடுத்தாகத் திரு சிங் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்