Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய தினக் கூட்ட உரையில் மனிதவளம் தொடர்பான அறிவிப்புகளுக்கு நல்ல வரவேற்பு: REACH

தேசிய தினக் கூட்ட உரையில் அறிவிக்கப்பட்ட மனிதவளம் தொடர்பான நடவடிக்கைகள் பற்றிப் பொதுவில் ஆக்ககரமான கருத்துகள் வந்திருப்பதாக REACH எனும் அரசாங்கக் கருத்தறியும் பிரிவின் மேற்பார்வைக் குழுத் துணைத்தலைவர் ரஹாயு மஹ்சம் (Rahayu Mahzam) தெரிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
தேசிய தினக் கூட்ட உரையில் மனிதவளம் தொடர்பான அறிவிப்புகளுக்கு நல்ல வரவேற்பு: REACH

கோப்புப் படம்: Calvin Oh

தேசிய தினக் கூட்ட உரையில் அறிவிக்கப்பட்ட மனிதவளம் தொடர்பான நடவடிக்கைகள் பற்றிப் பொதுவில் ஆக்ககரமான கருத்துகள் வந்திருப்பதாக REACH எனும் அரசாங்கக் கருத்தறியும் பிரிவின் மேற்பார்வைக் குழுத் துணைத்தலைவர் ரஹாயு மஹ்சம் (Rahayu Mahzam) தெரிவித்திருக்கிறார்.

எனினும் மேல்விவரங்கள் பற்றி அக்கறை நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.

கூடுதல் காலம் வேலைசெய்யும் வாய்ப்பை சிங்கப்பூரர்கள் வரவேற்றுள்ளனர்.

ஆனால் அதன் தொடர்பான நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படும், மத்திய சேமநிதிச் சந்தா மாற்றங்கள் ஊழியர்களை எவ்வாறு பாதிக்கும் போன்ற கேள்விகள் நிலவுவதாகத் திருவாட்டி ரஹாயு தெரிவித்தார்.

பாலர் பள்ளி உதவித்தொகை குறித்து இளம் பெற்றோர் அதிக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் அது செலவுகளைக் கணிசமாகக் குறைப்பதாகத் திருவாட்டி ரஹாயு சொன்னார். அதேபோல், பல்கலைக் கழக மாணவர்களின் பெற்றோர் உயர்கல்வி உதவித்தொகையை வரவேற்றுள்ளனர்.

பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றத்தைத் தவிர்ப்பதற்குப் பதிலாக அதனை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர் என்றார் அவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்