Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சொத்து முகவர்களின் சேவையை மதிப்பீடு செய்வதற்கான புதிய செயலி

பரிவர்த்தனைச் சேவைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகச் செயலி அறிமுகம் கண்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் வீடுகளை விற்போரும் வாங்குவோரும் இனி சொத்துமுகவர்களைத் தொடர்புகொள்ள புதிய செயலி ஒன்றைப் பயன்படுத்தலாம்.

"RealHome" எனப்படும் அந்தச் செயலியில் சொத்துமுகவர்களின் சேவையை மதிப்பீடும் செய்யலாம். 

செயலியின் முன்னோடி வடிவம் இன்று வெளியானது.
இன்னமும் ஒரு மாதத்தில் அது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்.

சொத்துக்களின் விவரங்களையும் குறிப்பிட்ட வீடுகளுக்கான முகவர்களின் தகவல்களையும் செயலியில் காணலாம்.

செயலியைக் கைபேசிகளில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று அதனை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.

பரிவர்த்தனைச் சேவைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகச் செயலி அறிமுகம் கண்டுள்ளது.

ERA Realty, Huttons Asia, PropNex Realty ஆகிய நிறுவனங்கள் அந்தத் திட்டத்தை வழிநடத்தின.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்