Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொருளியல் மந்தநிலை ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை: துணைப் பிரதமர் ஹெங்

பொருளியல் மந்தநிலை ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

பொருளியல் மந்தநிலை ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியிருக்கிறார்.

சிங்கப்பூர் பொருளியல் கடந்த காலாண்டில், அதற்கு முந்திய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.1 விழுக்காடு விரிவடைந்தது.

முதல் காலாண்டில் பதிவான 1.1 விழுக்காடு வளர்ச்சியை விட அது குறைவாகப் பதிவானது.

இரண்டாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் இன்று வெளியான பிறகு திரு. ஹெங் Facebook பதிவில் அவ்வாறு குறிப்பிட்டார்.

சிங்கப்பூர்ப் பொருளியலில், தகவல்-தொடர்பு, கட்டுமானம் போன்ற வலுவான துறைகளும் இருப்பதாய் அவர் கூறினார்.

அரசாங்கம் நிலைமையை அணுக்கமாகக் கவனித்து வருவதாகக் கூறிய திரு. ஹெங், எத்தகைய சூழ்நிலைக்கும் தயாராகிக்கொள்ள அது முதலாளிகள், தொழிற்சங்கங்கள் என இருதரப்புடனும் இணைந்து செயல்படுவதாய்ச் சொன்னார்.

சிங்கப்பூரர்கள் குறுகிய காலப் பொருளியல் சவால்களைச் சமாளிக்கும் அதேவேளையில், இடைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையிலான விவகாரங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும் என்று திரு. ஹெங் நினைவுபடுத்தினார்.

வருங்காலப் பொருளியல் மன்றம் அதன் தொழில்துறை உருமாற்றுத் திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும். அதேவேளையில் நிறுவனத் திறன்களை வலுப்படுத்துதல், வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுதல் போன்றவற்றிலும் அது கவனம்செலுத்தும் என்று துணைப்பிரதமர் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்