Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: நேற்று குணமடைந்தவர்கள் பற்றிய சில விவரங்கள்

COVID-19 பாதிக்கப்பட்டவர்களில் மேலும் நால்வர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களைப் பற்றிய சில விவரங்கள்...

வாசிப்புநேரம் -
COVID-19: நேற்று குணமடைந்தவர்கள் பற்றிய சில விவரங்கள்

(Photo: Try Sutrisno Foo)

COVID-19 பாதிக்கப்பட்டவர்களில் மேலும் நால்வர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களைப் பற்றிய சில விவரங்கள்...

யார்: 43 வயது முழு நேர தேசிய சேவையாளர்

இம்மாதம் 9ஆம் தேதி கிருமித்தொற்று அறிகுறிகள் ஏற்பட்டபோது மருந்தகத்திற்குச் சென்றார். Grace Assembly of God தேவாலயத்தின் தங்ளின், புக்கிட் பாத்தோக் கிளைகளில் பணிபுரிந்த நோய்வாய்ப்பட்ட நபருடன் அவர் தொடர்பிலிருந்தார்.

இம்மாதம் 13 ஆம் தேதி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு, 15 ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்ற பிறகு நேற்று (பிப்ரவரி 26) அவர் வீடு திரும்பினார்.

யார்: 61 வயது சிங்கப்பூர் ஆடவர்

தனியார் மருத்துவமனையின் மயக்கமருந்தியல் மருத்துவராக (anaesthesiologist) இருக்கும் அவருக்கு 7ஆம் தேதி நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டன.

மூன்று நாள் கழித்து ஃபேரர் பார்க் மருத்துவமனை மருந்தகத்தில் சிகிச்சை பெற்றார். 13 ஆம் தேதி மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்ற அவர் பின்னர் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

யார்: 30 வயது பங்களாதேஷ் ஊழியர்

Seletar Aerospace Heights கட்டுமானத் தளத்தில் நோய்வாய்ப்பட்ட ஊழியருடன் தொடர்பிலிருந்தவர்.

அரசாங்க வசதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு 12 ஆம் தேதி நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

13ஆம் தேதி அவருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. நேற்று அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

யார்: டோ குவான் ரோட்டில் வசிக்கும் 46 வயது சிங்கப்பூர் ஆடவர்.

Grace Assembly of God தேவாலயத்தில் பணிபுரியும் ஆடவர், நோய்வாய்ப்படும் முன், தங்ளின், புக்கிட் பாத்தோக் கிளைகளில் வேலை பார்த்தார்.

பிப்ரவரி 3ஆம் தேதி அவருக்குக் கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன. 8ஆம் தேதி தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆடவர் அதே நாளில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

இரண்டு நாள்களுக்குப் பின் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்ற ஆடவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு அவர் நேற்று வீடு திரும்பினார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்