Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் வீட்டிலிருந்தவாறே குணமடையும் நடைமுறை இன்று முதல் நடப்புக்கு வருகிறது

சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு COVID-19 நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் வீட்டிலிருந்தவாறே குணமடையும் நடைமுறை இன்று முதல் நடப்புக்கு வருகிறது.

வாசிப்புநேரம் -
நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் வீட்டிலிருந்தவாறே குணமடையும் நடைமுறை இன்று முதல் நடப்புக்கு வருகிறது

(படம்: CNA)

சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு COVID-19 நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் வீட்டிலிருந்தவாறே குணமடையும் நடைமுறை இன்று முதல் நடப்புக்கு வருகிறது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட 12 இலிருந்து 50 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு அது பொருந்தும்.

அவர்களுக்குக் கடுமையான அறிகுறி இருக்கக்கூடாது அல்லது லேசான அறிகுறிகளே இருக்கவேண்டும்.

நோயாளிகள் தனிமைப்படுத்தப்படும் வீட்டில், எளிதில் பாதிக்கப்படும் சாத்தியமுள்ள 80 வயதுக்கு மேற்பட்டோர் அல்லது கர்ப்பிணிகள் போன்றோர் இருக்கக்கூடாது.

தனிமைப்படுத்தப்பட்டவருக்கு 24 மணிநேரத் தொலைத்தொடர்பு மருத்துவச் சேவை வழங்கப்படும்.

அவருக்கு மின்னியல் கண்காணிப்புக் கருவி பொருத்தப்படலாம்.

அறிகுறிகள் தொடர்பான விவரங்களும் நோயாளிகளுக்கு வழங்கப்படும்.

வெப்பமானி அல்லது Oximeter கருவி இல்லாதோர் அவற்றைக் கேட்டுப் பெறலாம்.

நோயாளிகள் 10 நாளுக்குத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்