Images
  • Recruiting Gang Members
    (படம்: Reuters)

குண்டர் கும்பலுக்கு ஆள்சேர்த்த சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

குண்டர் கும்பலுக்கு ஆள் சேர்த்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு ஆடவர்கள்மீது நாளை(Sep 12) குற்றஞ்சாட்டப்படும்.

21, 28 வயதுடைய இருவரும் குண்டர் கும்பலில் சேர்ந்தர்களிடம் உறுப்பியக் கட்டணங்களை வசூலித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்குரிய நபர்கள்மீதான விசாரணை தொடர்வதாகக் காவல்துறை கூறியுள்ளது.

குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 20 நபர்களில் இவர்களும் அடங்குவர் எனக் காவல் துறை தெரிவித்தது.

சட்டத்திற்குப் புறம்பான குழுக்களில் ஈடுபட்டாலோ அல்லது அந்தக் குழுவில் சேர ஆட்களை வரவழைத்தாலோ 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 5000 வெள்ளி வரை அபராதாமும் விதிக்கப்படலாம்.

சட்டவிரோதமான குழுக்களில் சேர உறுப்பியக் கட்டணங்கள் வசூலிப்போருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 5000 வெள்ளி வரை அபராதாமும் விதிக்கப்படலாம்.  

Top