Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கை

சிங்கப்பூரின் ஆகப் புதிய அரசியல் கட்சியான Red Dot United எனும் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி, தேர்தல் கொள்கை அறிக்கையை  வெளியிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கை

படம்: Samuel Woo/TODAY

சிங்கப்பூரின் ஆகப் புதிய அரசியல் கட்சியான Red Dot United எனும் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி, தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நாட்டைச் சரியான வழியில் செலுத்த விரும்புவதாக இணையம் வழியே நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அக்கட்சி தெரிவித்தது.

அரசாங்க நடைமுறைகளிலும், பொது நிதியை பயன்படுத்துவதன் தொடர்பிலும் கூடுதல் வெளிப்படைத்தன்மை தேவை என்று அக்கட்சி கூறியது.

தேவையற்ற செலவுகள், பொருள் வீணாகுதல் ஆகியவற்றைத் தடுக்கவும் வெளிப்படைத்தன்மை உதவும் என்பதை அது சுட்டியது.

பொது அமைப்புகளின் நம்பகத்தன்மைக்கு அவற்றின் முக்கிய செயல்திட்டங்களை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்று கட்சி கூறியது.

உள்ளூர் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதியுதவி, உள்கட்டமைப்பு ஆகியவற்றை வழங்க அது பரிந்துரைத்தது.

சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தகத்தைச் சார்ந்திராமல், தன்னிறைவுடன் திகழ அது வகைசெய்யும்.

ஒற்றையர்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை வாங்குவதற்கான வயது வரம்பைக் குறைத்தல், கட்டாயக் கல்வியைப் பத்தாண்டுகளுக்கு விரிவுபடுத்தல், பருவநிலை மாற்றத்தைச் சமாளித்தல் போன்றவை தொடர்பான அம்சங்களும் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் தேர்தல் கொள்கையறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்