Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சொத்துகள் வாங்குவோருக்கான கூடுதல் முத்திரைக் கட்டணத்தை ரத்துசெய்வது குறித்து பரிசீலிக்கும்படி REDAS கோரிக்கை

சொத்துகள் வாங்குவோருக்கான கூடுதல் முத்திரைக் கட்டணத்தை ரத்துசெய்வது குறித்துப் பரிசீலிக்கும்படி REDAS எனும் சிங்கப்பூர் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சொத்துகள் வாங்குவோருக்கான கூடுதல் முத்திரைக் கட்டணத்தை ரத்துசெய்வது குறித்து பரிசீலிக்கும்படி REDAS கோரிக்கை

(படம்: TODAY)

வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்

சொத்துகள் வாங்குவோருக்கான கூடுதல் முத்திரைக் கட்டணத்தை ரத்துசெய்வது குறித்துப் பரிசீலிக்கும்படி REDAS எனும் சிங்கப்பூர் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில், சங்கத்தின் தலைவர் சியா நியாங் ஹொங் (Chia Ngiang Hong) அதனைத் தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திடீரென நடப்புக்கு வந்த கூடுதல் முத்திரைக் கட்டணத் திட்டம், சிங்கப்பூர் நிதிச் சந்தையை ஆட்டிப் படைத்தது.

அதனால் சொத்துகள் தொடர்பான பங்குச் சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

திட்டத்தை மறு ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்ட திரு. சியா, முதல்முறையாகச் சொத்து வாங்குவோருக்கான கடன் வரம்பையும் மறுஆய்வு செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்