Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சூறாவளி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவ, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் கூடுதல் 200,000 டாலர் நிதி

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், சூறாவளி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவ கூடுதல் 200,000 டாலர் நிதி வழங்கவுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், சூறாவளி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவ கூடுதல் 200,000 டாலர் நிதி வழங்கவுள்ளது.

கம்போடியா (Cambodia), லாவோஸ் (Laos), பிலிப்பீன்ஸ் (Philippines), வியட்நாம் (Vietnam) ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு அளிக்க அந்த நிதி உதவும்.

அவர்களுக்குத் தண்ணீர் வடிகட்டிகள், தண்ணீர்த் தொட்டிகள், துப்புரவுச் சாதனங்கள், சுகாதார கருவிகள் ஆகியவை வழங்கப்படும்.

தண்ணீரால் பரவக்கூடிய நோய்கள், மோசமான சுகாதாரம், உணவுப் பற்றாக்குறை, அசுத்தமான தண்ணீர் ஆகிய பிரச்சினைகளால் மீட்பு ஊழியர்கள் கூடுதல் சவால்களை எதிர்நோக்குகின்றனர். அதனால், வழங்கப்படவுள்ள கருவிகள் மிகவும் பயனுள்ளவை என்று சங்கத் தலைவர் திரு. பென்ஜமின் வில்லியம் (Benjamin William) தெரிவித்தார்.

இம்மாதம் சங்கத்தால் தொடங்கப்பட்ட பொது நிதி திரட்டு முயற்சிக்கு, சிங்கப்பூர் அரசாங்கம் தொடக்கமாக 200,000 டாலர் வழங்கியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்