Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கழிவுகளைக் குறைப்பது எப்படி?

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நாம் பங்காற்றலாம். கழிவுகளைக் குறைக்கவும், அவற்றை மறுபயனீடு செய்யவும் தனிநபர்கள் உதவலாம் என்று பிரதமர் லீ சியென் லூங் தேசிய தினக் கூட்ட உரையில் குறிப்பிட்டார்

வாசிப்புநேரம் -
கழிவுகளைக் குறைப்பது எப்படி?

படம்: TODAY

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நாம் பங்காற்றலாம். கழிவுகளைக் குறைக்கவும், அவற்றை மறுபயனீடு செய்யவும் தனிநபர்கள் உதவலாம் என்று பிரதமர் லீ சியென் லூங் தேசிய தினக் கூட்ட உரையில் குறிப்பிட்டார்.

சுற்றுச்சுழல் பாதுகாப்பில் மறுபயனீடு(Recycle), மறுபயன்பாடு(Reuse), கழிவுகளைக் குறைப்பது (Reduce) ஆகியவை 3 தூண்களாகக் கருதப்படுகின்றன.

கழிவுகளைக் குறைப்பது எப்படி?

1. பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும். துணிப் பைகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

2. ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களைப் பயன்படுத்துவதை நிறுத்தலாம்.

3. பொருளைப் பயன்படுத்தியவுடன் அதைக் குப்பையில் வீசாமல், அந்தப் பொருளுக்கு இன்னொரு பயனைக் கண்டறிந்து பயன்படுத்தலாம்.

4. காகிதத்தின் இரு பக்கங்களையும் பயன்படுத்தலாம்.

5. கடைகளில் வழங்கப்படும் பைகளைப் பயன்படுத்தாமல் சொந்தப் பைகளைப் பயன்படுத்தலாம்.

6. பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களுக்குப் பதிலாக, உலோகம், காகிதம் ஆகியவற்றால் செய்யப்படும் உறிஞ்சு குழல்களைப் பயன்படுத்தலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்