Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் உயர்கல்வி நிலையங்கள்

COVID-19 கிருமிப் பரவலைக் குறைக்கும் நோக்கில் சிங்கப்பூரின் உயர்கல்வி நிலையங்கள் வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் முனைந்துள்ளன.

வாசிப்புநேரம் -
வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் உயர்கல்வி நிலையங்கள்

(படம்: Darius Boey/ CNA)


COVID-19 கிருமிப் பரவலைக் குறைக்கும் நோக்கில் சிங்கப்பூரின் உயர்கல்வி நிலையங்கள் வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் முனைந்துள்ளன.

வகுப்பில் நடத்தப்படும் பாட விரிவுரைகளை ரத்து செய்தல், மின்னியல்-கல்வி முறைக்கு மாறுதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

கல்வி அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) நாடாளுமன்றத்தில் இன்று அந்தத் தகவல்களை வெளியிட்டார்.

அதிகமானோர் கூடும் நிகழ்ச்சிகளை ஒத்திப்போட அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

இதுவரை உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த ஊழியர்கள், மாணவர்களிடையே COVID-19 கிருமிப் பாதிப்பு மூவரிடம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் அதிகம் கூடுவதைக் கட்டுப்படுத்தும் வழிகாட்டிக்குறிப்புகளைக் கல்வி நிலையங்கள் வரைந்துவருவதாக அமைச்சர் ஓங் கூறினார்.

வளாகங்கள் தொடர்ந்து செயல்பட அது வகைசெய்யும். அதே நேரத்தில் கிருமிப் பரவலையும் அது தணிக்கும் என்றார் அவர்.

ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 50 மாணவர்களை மட்டும் அனுமதிப்பது குறித்துக் கல்வி நிலையங்கள் பரிசீலித்து வருகின்றன.

வகுப்புகளும், பாடத்திட்ட ஒப்படைப்பு தொடர்பான குழு நடவடிக்கைகளும், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களோடு தொடர்வதாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்