Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் இணையத்தில் பதிவுசெய்யவேண்டும்

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு பதிந்துகொள்ளவேண்டும்.

வாசிப்புநேரம் -
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் இணையத்தில் பதிவுசெய்யவேண்டும்

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு பதிந்துகொள்ளவேண்டும்.

அந்த நடைமுறை நேற்று தொடங்கியது.

பள்ளிகள், மருத்துவமனைகள், குறிப்பிட்ட சந்தைகள் ஆகிய அக்கறைக்குரிய கிருமித்தொற்றுக் குழுமங்களுடன் தொடர்பற்றவர்களோடு வசிப்போருக்கு மட்டுமே நடைமுறை பொருந்தும்.

அதனால், தொடர்புத் தடம் கண்டறியும் பணியில் ஈடுபடுவோர் மேலும் அக்கறைக்குரிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தமுடியும் என்று சுகாதார அமைச்சு கூறியது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் அக்கறைக்குரிய குழுமங்களுடன் தொடர்பில்லாதவர்களை, சுகாதார அமைச்சு தொடர்பு கொள்ளும்.

நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள், வீட்டில் தனிமைப்படுத்தும் நடைமுறைக்கு இணையத்தில் பதிந்துகொள்ள நினைவூட்டுமாறு குறுந்தகவல் அனுப்பப்படும்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் வசிப்போர் https://go.gov.sg/quarantinereg எனும் இணையப்பக்கத்தில், பதிவுசெய்யவேண்டும்.

தனிமைப்படுத்தும் காலம், பரிசோதனைகள் குறித்து அவர்களுக்குத் தகவல் அனுப்பப்படும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்படுவோர், அதன் தொடக்கத்திலும் நிறைவிலும் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

அவர்கள் தினந்தோறும் சுய பரிசோதனைகளைச் செய்வதும் கட்டாயம்.

தனிமைப்படுத்தப்படுவோர், தொலை மருத்துவச் சேவைகளை அணுக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

தனிமைப்படுத்தும் காலம், அண்மையில் 14 இலிருந்து 10 நாளுக்குக் குறைக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்