Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிபர் சவால் நிதி திரட்டு - 2,000 கிலோமீட்டர் அஞ்சலோட்டத்தில் 200 பேர்

இந்த ஆண்டின் அதிபர் சவாலுக்கு நிதி திரட்ட 2,000 கிலோமீட்டர் அஞ்சலோட்டத்தில் 200 பேர் இறங்கவிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
அதிபர் சவால் நிதி திரட்டு - 2,000 கிலோமீட்டர் அஞ்சலோட்டத்தில் 200 பேர்

(படம்: Victor Mok)

இந்த ஆண்டின் அதிபர் சவாலுக்கு நிதி திரட்ட 2,000 கிலோமீட்டர் அஞ்சலோட்டத்தில் 200 பேர் இறங்கவிருக்கின்றனர்.

அதன்வழி, 1 மில்லியன் வெள்ளி நிதி திரட்டுவது நோக்கம்.

Relay Majulah எனும் அந்த அஞ்சலோட்டத்தை முடிக்க பல பின்னணிகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுக்கு 8 நாள்கள் உள்ளன.

வரும் நவம்பர் 2ஆம் தேதியன்று சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் அஞ்சலோட்டம் தொடங்கும்.

மீடியாகார்ப்பின் MES அரங்கில் அது நிறைவடையும்.

அதிபர் நட்சத்திர நிதிதிரட்டு நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பின் ஓர் அங்கமாக அது அமையும்.

ஒவ்வொரு பங்கேற்பாளரும் 10 அல்லது 20 கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்குத் தெரிவு செய்யலாம்.

சேனல்நியூஸ் ஏஷியா படைப்பாளர் கிளெண்டா சோங் (Glenda Chong), உடற்குறையுள்ள முன்னாள் விளையாட்டு வீரர் எமிலி லீ (Emily Lee), நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் (Tan Chuan-Jin) ஆகியோர் அந்த ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்