Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

16 வழிபாட்டுத் தலங்களில், பாதுகாப்பு விதிமுறைகளுடன் நேரடி இசைக்கு அனுமதி

சமய நிகழ்ச்சிகளில் நேரடி இசை வாசிப்பதற்கான முன்னோடித் திட்டம் 16 வழிபாட்டுத் தலங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -

சமய நிகழ்ச்சிகளில் நேரடி இசை வாசிப்பதற்கான முன்னோடித் திட்டம் 16 வழிபாட்டுத் தலங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.

அத்திட்டம் அடுத்த சனிக்கிழமையிலிருந்து தொடங்கும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு தெரிவித்தது.

அதேசமயம், பாதுகாப்பு விதிமுறைகளும் உறுதிசெய்யப்படும் என்று அமைச்சு கூறியது.

அந்த 16 வழிபாட்டுத் தலங்களும் சிங்கப்பூரின் பல்வேறு சமயக் குழுக்களைப் பிரதிபலிப்பதாக அமைச்சு சொன்னது.

இன, சமய நல்லிணக்கத்துக்கான குழுவை கலந்து ஆலோசித்த பிறகு, அவை தெரிவு செய்யப்பட்டதாய் அமைச்சு குறிப்பிட்டது.

இந்துக் கோயில்கள்:

  • ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோவில் (வியாழன், சனிக்கிழமைகளில்)
  • ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் ( வெள்ளி, சனிக்கிழமைகளில் மட்டும்)

தேவாலயங்கள் - (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்)

  • St Joseph Church
  • Covenant Evangelical Free Church
  • Blessed Grace Church, Bethesda (Bedok-Tampines) Church
  • Zion Full Gospel Church
  • New Life Community Church, Covenant Vision Christian Church

பௌத்த ஆலயங்கள் (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், சீன நாள்காட்டியின்படி மாதத்தின் முதலாம், 15-ஆம் நாள்களில் மட்டும்)

  • Buddha Tooth Relic Temple
  • Singapore Buddhist Lodge

சீக்கிய வழிபாட்டுத் தலங்கள் (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்)

  • Gurdwara Sahib Yishun
  • Sri Guru Singh Sabha
  • Central Sikh Temple

தாவோ ஆலயங்கள் (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், சீன நாள்காட்டியின்படி மாதத்தின் முதலாம், 15-ஆம் நாள்களில் மட்டும்)

  • Lorong Koo Chye Sheng Hong Temple Association
  • Hougang Tao Mu Temple

விதிமுறைகள்...

  • ஒரு மேடையில் 10 இசைக் கலைஞர்கள் வரை இருக்க அனுமதிக்கப்படும்.
  • அவர்களில் அதிகபட்சம் 5 பேர் முகக்கவசம் அணிந்திருப்பது அவசியம்
  • இசைப் படைப்பு உள்ளரங்கில் நடைபெற்றால், இரு பாடகர்கள் மட்டுமே முகக்கவசத்தை அணியாமல் இருக்கலாம்.
  • கலைஞர்கள் எந்நேரமும் பாதுகாப்பு இடைவெளி தொடர்பான விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.
  • சமய வழிபாட்டுக்குக் கூடும் பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும்.

அடுத்த சனிக்கிழமையிலிருந்து, வழிபாட்டுத் தலங்களில் ஒரு நேரத்தில் 100 பேர் வரை அனுமதிக்கப்படுவர்.

ஒரே நேரத்தில் 250 பேர் வரை ஒன்றுகூடும் முன்னோடித் திட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் வழிபாட்டுத் தலங்கள் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சிடம் விண்ணப்பிக்கலாம்.

அவை, நூறு பேரைக்கொண்ட சமய நிகழ்ச்சிகளைப் பாதுகாப்பாக நடத்த முடிவதை நிரூபிக்க வேண்டும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்