Images
  • religious group (1)
    (படம்: National Heritage Board)

வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிலங்களைச் சமயக் குழுக்கள் மட்டுமே ஏலத்தில் பெற முடியும்

சமூகத்திற்குத் துடிப்பாக பங்களித்து வரும் சமயக் குழுக்கள் மட்டுமே இனி வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிலங்களை ஏலத்தில் பெற முயற்சி செய்ய முடியும்.

சமயக் குழுக்களின் பயன்பாட்டுக்கான நில ஏலக்குத்தகைக் கட்டமைபில் செய்யப்படும் மாற்றங்களின் ஒரு பகுதியாக அது இடம்பெறும்.

அதுபோன்ற ஏலக்குத்தகைகள் இதுவரை நிலங்களுக்கான விலையில் மட்டும் கவனம் செலுத்தி வந்ததாக தேசிய வளர்ச்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குத்தகையாளர்கள் வெளிநாட்டு நன்கொடைகளை முன்வைத்து நிலத்திற்காகப் போட்டி போடும் சூழ்நிலைகளைத் தவிர்க்கும் நோக்கில் நிதி தொடர்பான முன்நிபந்தனைகள் தற்போது வலுப்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சு கூறியுள்ளது.

ஒரே நேரத்தில் ஒரே சமயத்தைச் சேர்ந்த பல்வேறு குழுக்களை இடம்பெறச் செய்யும் அமைப்புகளின் மையங்களை மேம்படுத்துவதற்காக நிலங்களையும் அமைச்சு முதன்முறையாக வெளியிடவுள்ளது.

தேவாலயங்கள், சீனக் கோவில்கள் ஆகியவற்றுக்காக ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது இரண்டு நிலங்கள் ஒதுக்கப்படும் என்று அமைச்சு கூறியுள்ளது.

Top