Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சமய நல்லிணக்கம் தொடர்ந்து பேணப்பட வேண்டும்: அதிபர் ஹலிமா

சிங்கப்பூரில் சமய நல்லிணக்கம் தொடர்ந்து பேணப்பட வேண்டிய ஒன்று என அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் சமய நல்லிணக்கம் தொடர்ந்து பேணப்பட வேண்டும்: அதிபர் ஹலிமா

படம்: MCI

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சிங்கப்பூரில் சமய நல்லிணக்கம் தொடர்ந்து பேணப்பட வேண்டிய ஒன்று என அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

அண்மை ஆண்டுகளில் சிங்கப்பூரர்கள், சமய நம்பிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டி வருவதை அதிபர் சுட்டினார்.

சிங்கப்பூரர்கள் சமயப் பற்றுள்ளவர்களாக இருக்கும் அதே வேளையில் நல்ல குடிமக்களாகவும் இருப்பது முக்கியம் என்று அவர் எடுத்துரைத்தார்.

பெய்ச்சிங்கில் இன்று காலை முதலாவது ஆசிய நாகரிக மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா உரையாற்றினார்.

உலகம் முழுவதும் காணப்படும் பிரிவினைகளுக்கு இடையே, சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் கட்டிக்காப்பது தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள உகந்த நேரம் இது என்றார் அவர்.

பல்லின, பல சமயச் சமூகமான சிங்கப்பூர், உலகம் எதிர்நோக்கி வரும் பெரிய அளவிலான சவாலை எடுத்துக்காட்டும் அடையாளமாக உள்ளது என்று அவர் கூறினார்.

பல்வேறு சமயங்களையும், பண்புநலன்களையும், பின்னணிகளையும் கொண்டவர்களை நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழச் செய்வது தான் அந்தச் சவால்.

பன்முகத்தன்மையை சிங்கப்பூர் அதன் வலிமையாகக் கருதுகிறது.

பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும் முயற்சியின் வாயிலாக நாட்டின் மீள்திறன் அதிகரித்து வருவதாக அதிபர் ஹலிமா குறிப்பிட்டார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்