Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொலைத்தொடர்புக் கருவிகள் மூலம் சட்டவிரோதச் சூதாட்டம்-சந்தேக நபர்கள் 28 பேர் கைது; சுமார் 1.2 மில்லியன் வெள்ளி ரொக்கம் பறிமுதல்

தொலைத்தொடர்புக் கருவிகள் மூலம் சட்டவிரோதமான சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 28 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

தொலைத்தொடர்புக் கருவிகள் மூலம் சட்டவிரோதமான சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 28 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 1.2 மில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.

குற்றப் புலனாய்வுத் துறை, தெம்பனிஸ், பொங்கோல், செங்காங், ஹவ்காங், யீஷூன் ஆகிய இடங்களில் நேற்று 2 மணி நேர அமலாக்க நடவடிக்கைகளை நடத்தியது.

படம்: SPF 

அதில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் 33 வயதுக்கும் 71 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அமலாக்க நடவடிக்கைகளின்போது,சூதாட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கணினிகள், கைத்தொலைபேசிகள், பந்தய ஆவணங்கள்-உள்ளிட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

படம்: SPF 

ஆக அதிகமான ரொக்கத் தொகை பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோதச் சூதாட்டச் சம்பவங்களில் இதுவும் ஒன்று.

சட்டவிரோதமான சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 6 பேர் மீது, நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

மற்றவர்கள் மீதான விசாரணை, தொடர்கிறது.

தொலைத்தொடர்புக் கருவிகள் மூலம் சட்டவிரோதச் சூதாட்டத்தை நடத்துதல், நிர்வகித்தல், அதற்கு ஏற்பாடு செய்தல்-போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், 20,000 முதல் 200,000 வெள்ளி வரையிலான அபராதமோ, அதிகபட்சம் 5 ஆண்டுச் சிறைத்தண்டனையோ , இரண்டுமோ விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்