Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஈரச்சந்தைகளின் சுமார் 7,000 கடைக்காரர்களின் ஒருமாத வாடகை தள்ளுபடி செய்யப்படும்

ஈரச்சந்தைகளின் சுமார் 7,000 கடைக்காரர்களின் ஒரு மாத வாடகை, தள்ளுபடி செய்யப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத்துக்கான மூத்த துணையமைச்சர் ஏமி கோர் (Amy Khor) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஈரச்சந்தைகளின் சுமார் 7,000 கடைக்காரர்களின் ஒருமாத வாடகை தள்ளுபடி செய்யப்படும்

(கோப்புப் படம்: CNA)

ஈரச்சந்தைகளின் சுமார் 7,000 கடைக்காரர்களின் ஒரு மாத வாடகை, தள்ளுபடி செய்யப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத்துக்கான மூத்த துணையமைச்சர் ஏமி கோர் (Amy Khor) தெரிவித்துள்ளார்.

தேசியச் சுற்றுப்புற அமைப்பு நிர்வகிக்கும் சந்தைகளின் கடைக்காரர்களுக்கு அது பொருந்தும் என்று தமது Facebook பக்கத்தில் அவர் குறிப்பிட்டார்.

உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாடகைத் தள்ளுபடியைப் போன்றே சந்தைக் கடைக்காரர்களுக்கு அறிவிக்கப்படுவதாக டாக்டர் கோர் சொன்னார்.

உணவகங்களை போலவே, தற்போதைய கட்டுப்பாடுகளால் சந்தைக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதை அவர் சுட்டினார்.

சுயதொழில் செய்வோர், நிதியமைச்சு அறிவித்த COVID-19 நிவாரண நிதியின்கீழ் ஒருமுறை வழங்கப்படும் 500 வெள்ளி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஏறக்குறைய 50 விழுக்காடு வரையிலான வருமானத்தை இழந்தோர் அதற்குத் தகுதி பெறுவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்