Images
  • Republic poly (1)
    படம்: Republic Polytechnic

போக்குவரத்து, இணையப் பாதுகாப்புத் துறைகளை மாணவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு

போக்குவரத்துச் செயல்பாடுகள், இணையப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் வேலைசெய்வது எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை மாணவர்கள் பெறவுள்ளனர்.

அதற்காக இரண்டு சோதனை முறையிலான பயிற்சி நிலையங்கள் அறிமுகம் காணவுள்ளன.

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, நிலப் போக்குவரத்து ஆணையம், 2 இணையப் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து அதனை அறிமுகம் செய்யவுள்ளன. அதன் மூலம் ஆண்டுதோறும் 250 மாணவர்கள் பயனடைவர்.

ரயில் செயல்பாட்டு நிர்வாகச் சோதனைக்கூடத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி நெருக்கடிகால நிர்வாகத் திறன்களை மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம்.  

Top