Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாதுகாவல் அதிகாரிகளை நீண்ட நேரம் வேலை செய்ய வைத்ததாக இரு தனியார் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

பாதுகாவல் அதிகாரிகளைத் தேவைக்கு மேல் அதிக நேரம் வேலை செய்யவைத்ததாக இரு தனியார் நிறுவனங்கள் மீது மனிதவள அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது.

வாசிப்புநேரம் -

பாதுகாவல் அதிகாரிகளைத் தேவைக்கு மேல் அதிக நேரம் வேலை செய்யவைத்ததாக இரு தனியார் நிறுவனங்கள் மீது மனிதவள அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரை அமைச்சு மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளில் Erawan Security, Volantra Security ஆகிய நிறுவனங்கள், அவ்வாறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அமைச்சு, ஏறக்குறைய 200 தனியார் பாதுகாவல் நிறுவனங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த நிறுவனங்களில், குறிப்பாக, வேலை செய்யும் நேரம், அதற்குப் பின்னரும் ஊழியர்கள் வேலை செய்யும் நேர வரம்பு முதலியவை வேலை நியமனச் சட்டத்தின்படி பின்பற்றப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்பட்டது.

பெரும்பாலான நிறுவனங்கள் அவற்றைப் பின்பற்றியதாக அமைச்சு சொன்னது.

Erawan Security, Volantra Security ஆகியவற்றின் ஊழியர்கள் சிலர், கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 17 முதல் 20 மணி நேரம் வரை அடிக்கடி வேலை பார்த்தது தெரியவந்தது.

சட்டத்தின்படி, தனியார் பாதுகாவல் நிறுவனங்கள், ஊழியர்களை அதிகபட்சம் 12 மணி நேரத்துக்கு மேல் வேலைபார்க்கச் சொல்லக்கூடாது.

நிறுவன முதலாளிகள், முதல்முறை சட்டத்தை மீறியது நிரூபிக்கப்பட்டால், 5,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் மீண்டும் சட்டத்தை மீறியது நிரூபிக்கப்பட்டால், சிறைத்தண்டனையோ அதிகபட்சம் 10,000 வெள்ளி அபராதமோ இரண்டுமோ அவர்களுக்கு விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்